அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என இரண்டு படங்கள் அடுத்து வெளியாக உள்ளது.
அடுத்த ஆண்டு 2025 முழுவதும் ஐரோப்பிய கார் பந்தையத்தில் கவனம் செலுத்தவுள்ள அஜித், ஒரு ஆண்டுக்கு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது.
உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.. மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா?
இந்நிலையில், நடிகர் அஜித் சமுத்திரகனியிடம் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் சமுத்திரகனி பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமுத்திரகனிக்கு அட்வைஸ்
அதில், ” துணிவு படத்தில் நானும் அஜித்தும் இணைந்து நடித்தோம். அப்போது அஜித் என்னிடம் ஒரு அட்வைஸ் கூறினார். அதாவது பைக்கை எடுத்துக்கொண்டு தனியாக ஒரு ட்ரிப் செல்லுங்கள்.
உங்களை யாருக்கும் தெரியாத ஒரு ஊருக்கு செல்லுங்கள், அது நீங்கள் உங்களையே உணர்ந்துகொள்ள உதவும் என்று கூறினார்” என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.