நடிகர் அஜித் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அஜித்தை பார்த்த ரசிகர்கள் “தல தல” என கத்தினார்கள்.
அதை பார்த்த அஜித் ‘இது கோவில், இப்படி கத்தாதீர்கள்’ என சைகையிலேயே சொல்லவிட்டு தொடர்ந்து நடந்தார்.

மாற்றுத்திறனாளி ரசிகர்..
அஜித்துடன் செல்பி எடுக்க பலரும் முயன்ற நிலையில் ஒரு ரசிகர் தான் காது கேட்க, வாய் பேச முடியாதவர் என்பதை சைகையில் கூறினார்.
அதை பார்த்து அஜித் உடனே அவரை அழைத்து அவர் போனில் செல்பி எடுத்து கொடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
காது கேக்காதுனு தெரிஞ்ச உடனே அவரே ஃபோன வாங்கி செல்ஃபி எடுத்தாரு பாருங்க ❤️❤️❤️#AjithKumar #AK64
pic.twitter.com/44MJiQ7kwk
— Madurai Online AFC (@AjithFCMadurai) October 28, 2025

