குட் பேட் அக்லி
அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது குட் பேட் அக்லி.
செம ஸ்மாட்டான ஒரு கேங்ஸ்டரின் கதையை மையப்படுத்தி கலகலப்பு, விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி இந்த படம் பெரிய ஹிட் படமாக அமைந்துவிட்டது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான இப்படம் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
2 வார முடிவில் தமிழகத்தில் இப்படம் மொத்தமாக ரூ. 172.3 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.
தமிழகத்தை தாண்டி இப்படத்திற்கு இலங்கையில் செம வரவேற்பு தான். இதுவரை மொத்தமாக அங்கு படம் ரூ. 15 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. வரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் பெரிய அளவில் அதிகரிக்கும என கூறப்படுகிறது.