விடாமுயற்சி
2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித் நடித்துள்ளார்.
விடுதலை 2 படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது. இம்மாதம் கடைசி வாரத்தில் தான் இப்படம் வெளியாகும் என்பது போல் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
அஜித் கூறிய விஷயம்
இந்த நிலையில், புத்தாண்டு ஸ்பெஷலாக விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விடாமுயற்சி படத்தை நடிகர் அஜித் பார்த்துவிட்டு கூறிய விஷயத்தை இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
படத்தை பார்த்த அஜித் குமார், “இதுபோன்ற படங்களில் தான் நடிக்க விரும்புகிறேன்” என கூறினாராம். மேலும் விடாமுயற்சி படம் வழக்கமான மாஸ் பொழுதுபோக்கு படமாக இல்லாமல் வலுவான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.
இதன்மூலம் விடாமுயற்சி படம் கண்டிப்பாக சிறப்பான விருந்தாக ரசிகர்கள் அமையப்போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.