அஜித் சம்பளம்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் இரண்டாவது திரைப்படம் குட் பேட் அக்லி.
அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
GBU படத்திற்காக வாங்கிய சம்பளம்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.