திருப்பதி
தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கமர்ஷியல் படங்களை இயக்கும் இயக்குநர்கள் அதிகம் இருக்கின்றனர். அதில் 90களில் பல ஹிட் படங்களை கொடுத்து சாதித்தவர் இயக்குநர் பேரரசு.
இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் அஜித்தை வைத்து திருப்பதி என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
குட் பேட் அக்லி பட வெற்றி.. அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் 23 வயது பிரபல நடிகை
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சதா நடித்து இருப்பார் லைலா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி இருப்பார்.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் 100 நாட்கள் மேல் திரையிடப்பட்டு ஹிட் கொடுத்தது.
மொத்த வசூல்
திருப்பதி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மொத்தமாக ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.