அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் யதார்த்தமான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி கடந்த 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.
மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்.. எப்போது தெரியுமா?
இந்த படத்தில் அனிருத் இசை பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலுக்கு ரீல்ஸ் செய்யாத சினிமா ரசிகர்களே இல்லை, அந்த அளவிற்கு இந்த பாடல் டிரெண்ட் ஆனது.
தமிழகம் முழுவதும் 900 தியேட்டர்களில் மேல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 3650 திரைகளுக்கு மேல் வெளியாகி இருந்தது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.