அஜித்
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது. இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு பின் வெளிவரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை பிரபல இயக்குநரும் அஜித்தின் தீவிர ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளிவரலாம் என்றும் கூறுகின்றனர்.
வாழ்க்கை சிறியது, 53 வயதில்.. அஜித் குமார் எமோஷனல்
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் என இதுவரை தெரியவில்லை. சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் இதில் அடிபடுகிறது.
அடுத்த பட அப்டேட்
ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், அதற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ப்ளாக் பஸ்டர் வெற்றி கூட்டணியில் இதற்கு முன், பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.