குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இன்று செம மாஸாக வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தை முதல் நாள் முதல் கட்சி பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வீடியோ வைரல்
இந்நிலையில், அஜித்குமாரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தனது மகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படத்தை பார்க்க சென்றுள்ளார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,
Shalini Ajith in here. #GBU pic.twitter.com/hzRhk9aOr8
— GoodBadUgly (@AkkshayKiron) April 10, 2025