நடிகர் சூர்யா ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அந்த படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 படமும் தொடங்கி இருக்கிறது. இதில் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் சாய் அபயங்கார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
மலையாள நடிகர்
இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.
ஏற்கனவே மலையாள நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அஜூ வர்கீஸும் இணைந்து உள்ளார்.