முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வழமைக்கு திரும்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமான சேவைகள்

புதிய இணைப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையக் கோளாறு காரணமாக அதன் சேவைகள் சுமார் 3 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டன.

முழுச் சேவையும் வழக்கநிலைக்குத் திரும்பச் சற்று நேரம் ஆகலாம் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது.

எத்தகைய இணையக் கோளாறு ஏற்பட்டது என்பது பற்றி அலாஸ்கா ஏர் குழுமம் தகவல்களை வெளியிடவில்லை.

முதலாம் இணைப்பு

அமெரிக்காவின் (United States) அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) விமான நிறுவனம் இணையக் கோளாறு காரணமாக அதன் சேவைகளை ரத்து செய்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (20.07.2025) ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் கணினிக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக அலாஸ்கா ஏர் (Alaska Air) குழுமம் தெரிவித்துள்ளது.

எனவே தற்காலிகமாக தனது அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்வதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சேவைகள் ரத்து

அதன்படி 238 போயிங் 737 விமானங்கள் உட்பட மொத்தமாக 325 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமான சேவைகள் | Alaska Airlines Grounds All Flights

இந்த நிலையில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானங்களின் வருகையைத் திட்டமிட்டுள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை, அலாஸ்கா ஏர் குழுமம் வெளியிடவில்லை.சுமார் 300 விமானங்களைக் கொண்டுள்ளது அலாஸ்கா ஏர் குழுமம்.

வழமைக்கு திரும்பிய அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமான சேவைகள் | Alaska Airlines Grounds All Flights

கடந்த மாதம் நடந்த இணைய ஊடுருவலால் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஹவாயியன் ஏர்லைன்ஸின் (Hawaiian Airlines) விமானச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

ஊடுருவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பை இன்னும் கணக்கிடுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்