வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயமென்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி அவர் இந்த அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என வெளிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகள்
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கலந்து கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தவிர அந்நாட்டு அமைச்சரவையின் பிரதம செயலாலர் யோஷிமா ஹயாஷி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் சப்ரியுடன் அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் இணைந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.