சிறிலங்கா (Sri Lanka) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) எகிப்து (Egypt) மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில், எகிப்திய வெளியுறவு அமைச்சர் பதர் அப்துலெட்டியின் (Badr Abdelatty) அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் (07) எகிப்திற்கு சென்றுள்ளார்.
இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு
கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு
வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.
பன்முக உறவு
குறிப்பாக, அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும்
இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன
கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் பல முக்கியஸ்தர்களையும்
சந்திக்கவுள்ளார்.
இந்த இருதரப்பு விஜயமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால
உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.