அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்.
அவர் தனது தேர்தல் மேடைகளில் கூறியதை போல இஸ்ரேல்- காசா யுத்ததை நிறுத்தினார், ரஸ்யா – உக்ரைன் நாடுகளிடையேவும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏனைய சில நாடுகளின் மீது இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டொனால்ட் ட்ரம்ப்பின் பார்வையிலிருந்து இலங்கை தப்பியுள்ளது என அரசியர் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்தார்.
ட்ரம்பினுடைய முக்கிய நிகழ்ச்சி நிரலில் இலங்கை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…