ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) எம்.பி. மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தற்போது அவரது பதவி நிலை குறித்து கட்சி ரீதியாகவும் வாதப்பிரதிவாதங்கள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், நேற்றைய தினம் முன்னதாக வெளியாகிய சில காணொளிகளையும், ஊடக தகவல்களையும் மேற்கோள்காட்டி சிலர் தனது பெயரை தவறாக சித்தரித்து வருவதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்தோடு ஐ.பி.சி தமிழ் வளைதளத்தில் செய்திகள் அவர் தொடர்பில் வெளியாகுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகம் என்பது மக்கள் கருத்துக்களை மக்கள் சார்பாக கொண்டு செல்லும் ஊடகமென்பதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதனுக்கு தெரிந்திருக்ககூடும்.
இங்கு தமிழ் தேசியத்தின் ஒரு முக்கிய அரசியல் கட்சி, அதன் பாரம்பரியம், செங்குருதி சிந்தி வடிவமைக்கப்பட் அதன் தலைமைத்துவத்தின் மீது சேறுபூசும் கருத்துக்கள் உலா வருவது தொடர்பில் கேள்வி எழுப்புவது மக்களுக்காக இயங்கும் ஊடகமொன்றின் கடமையாகும்.
அவ்வாறு தன்மேல் அவதூறு பரப்புவதாக செல்வம் எம்.பியால் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் அவருடைய கருத்துக்களையும் வெளிப்படுத்த எமது ஊடகம் காத்திருக்கின்றது என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இது செல்வம் எம்.பியை அவததூறாக சித்தரித்து அரசியல் இலாபம் தேடுபவர்களுக்கு அப்பாற்படட்டு பொதுதரப்பின் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.
இந்நிலையில், எமது ஊடக நிறுவனம் அவருக்கு தனது தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்தவார் என்றார் அதையும் மக்கள் மயப்படுத்தும் வாய்ப்பை வழங்கத் தயாராக இருக்கிறது.
செல்வம் அடைக்களநாதன் எம்.பி.யின் விளக்கத்தை முழுமையாகப் பெற்று, எந்தவித மாற்றமுமின்றி பிரசுரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அந்த வகையில், செல்வம் எம்பி மீதான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிச்சம் காணுமா? அல்லது அரசியல் திரையிடப்பட்டு மறைக்கப்படுமா என்பதை மக்கள் மயப்படுத்தவேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்குள்ளது.
https://www.youtube.com/embed/Exhkx4K6gEs

