முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

சட்ட விரோதமான முறையில் யாப்பின் விதிகளை புறக்கணித்து திருகோணமலை (Trinco) திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினை தம்வசமாக்க நினைக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் (Senthil Thondaman) சட்டவிரோத செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன
சபையனர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் இன்றையதினம் (11) ஊடகவியலாளர் சந்திப்பு
ஒன்று ஆலய பரிபாலன சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆலய பரிபாலன் சபைத் தலைவர் திலகரத்தினம்
துஷ்யந்தன் ஆலயத்தில் அண்மையில் திருட்டுப் போனதாக கூறப்படும் சோழர்கால நகை தொடர்பிலான
விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அதிகார மீறல்

இது தொடர்பிலாக போலியான செய்திகள் பரப்பப்பட்டதாகவும் அது ஆளுநர் செயலகம்
மூலமாகவும் போலியான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு | Allegation Against The Eastern Governor

இதுவரைகாலமும் படிப்படியாக நடாத்தப்பட்டு வரும் நிர்வாக சபையில் எந்த வகையிலும்
சோழர் காலத்தினுடைய நகைகள் எதுவுமே இதுவரை கையிருப்பிலும் இல்லை கைமாறப்படவும்
இல்லை என அவர் இதன்போது கூறினார்.

காணாமல் போனதாக கருதப்படும் நகைகள் தினசரி பாவனைக்காக பயன்படுத்தப்படும் 3
பவுன் நகை மாத்திரமே என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த 3 தினங்களுக்கு
முன்பாக ஆலய பொதுச் சபை கூட்டம் ஒன்றினை கூட்டுமாறு தம்மை பணித்ததாகவும் அதற்கு
யாப்பின் அடிப்படையில் அனுமதி இன்மையால் அது தொடர்பில் தெளிவாக ஆலய
தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் குறிப்பாக இன்றையதினம்
கிழக்கு மாகாண ஆளுநர், பொதுச்சபை கூட்டம் எனும் போர்வையில்
திட்டமிட்ட அபகரிப்பிற்கு வழிகோலுவதாகவும் தெரிவித்தனர்.

இன்றையதினம் ஆளுநரால் கூட்டப்படும் கூட்டமானது அதிகாரத்தினை மீறும்
வகையில் அமைவதாக இதன் போது கருத்து வெளியிட்ட ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Source: https://ibctamil.com/article/allegation-against-the-eastern-governor-1723373307?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.