கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்டக் காலத்தில் சஜித் பிரேமதாசவைப் (Sajith Premadasa) படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
ஆதரவுக் குழுக்கள்
கடந்த அரகலய போராட்டக்காலத்தில் 2022ஆம் ஆண்டின் மே மாதம் 09ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளின் போது குருநாகலையில் அமைந்திருந்த ஜோன்ஸ்டனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அலுவலகத்தைப் புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வின் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அரகலய போராட்டக் காலத்தின் போது தேசிய மக்கள் சக்தி தனது ஆதரவுக் குழுக்களைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைப் படுகொலை செய்யும் திட்டமொன்றைக் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும், இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தரப்பில் இருந்தோ அல்லது சஜித் தரப்பில் இருந்தோ இதுவரை எதுவித கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |