கனடாவில் (Canada) வரி செலுத்தும் பிரஜைகளுக்கு கொடுப்பனவு வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கனடாவில் ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தைச் சேர்ந்த பிரஜைகளுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே, இந்த கொடுப்பனவுத் தொகைக்கான காசோலை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
செலவு அதிகரிப்பு
கார்பன் வரிவிதிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் வட்டி வீத அதிகரிப்பு மற்றும் உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு வரி செலுத்தும் பிரஜைகளுக்கு ஒரு கொடுப்பனவுத் தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், தலா 200 டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 2023 ஆம் ஆண்டு 18 வயதை பூர்த்தி செய்த கனடிய பிரஜைகளுக்கு இந்த தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு கொடுப்பனவு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு மூன்று பில்லியன் டொலர்கள் வரையில் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.