நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்துபோனார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பிறகு ஜாமினில் விடுவிக்கக்பட்டார்.
இந்நிலையில் இன்று போலீஸ் விசாரணைக்காக அனுப்பி இருந்த சம்மன் ஏற்று இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரத்திற்க்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பவுன்சர் கைது
அல்லு அர்ஜுனுக்கு பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரை இன்று போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ரசிகர்களை பவுன்சர் தள்ளிவிட்ட நிலையில் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அல்லு அர்ஜுன் பற்றியும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.