நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் தற்போது தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
அப்படி சூர்யாவுக்கு நடந்த ஒரு விஷயத்தை பார்த்து தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டதாக நடிகர் அல்லு அர்ஜுன் கூறி இருக்கிறார்.
கஜினியால் வந்த பாதிப்பு
“சூர்யாவின் கஜினி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழை தாண்டி மற்ற தெலுங்கிலும் வரவேற்பை பெற்றது. அதை பார்த்துவிட்டு சூர்யாவின் பழைய படங்கள் பலவற்றையும் டப் செய்து தெலுங்கில் ரிலீஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள்.”
“5 – 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த படங்கள் தற்போதைய தரத்திற்கு இருக்காது. அப்படி பழைய படங்களை டப் செய்து கொண்டு வந்து கொட்டினால் செய்தால் அந்த ஹீரோவின் மார்க்கெட்டை கொன்றுவிடும்.”
“அதனால் என்னுடைய படங்களை தமிழில் டப் செய்ய வேண்டாம் என பல வருடங்களாக கூறி வந்தேன். அது தான் என படங்கள் தமிழில் வராததற்கு காரணம். தெலுங்கை அடுத்து தமிழ் தான் எனக்கு நன்கு தெரிந்த மொழி” என அல்லு அர்ஜுன் கூறி இருக்கிறார்.