அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஹீரோவான அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூலம் உலகளவில் பிரபலமாகிவிட்டார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அட்லீயுடன் இணைந்து படம் பண்ணவுள்ளார் அல்லு அர்ஜுன். இன்று அதற்கான அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
குட் பேட் அக்லி படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரம்.. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடியா
இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவருடைய புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
சொத்து மதிப்பு
43 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அல்லு அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் புஷ்பா 2 திரைப்படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என்கின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.