நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 பிரிமியர் காட்சி திரையிடப்பட்ட சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
அந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்தார். இருப்பினும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் இன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கீழ் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து இருக்கிறது.
இருப்பினும் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
சிறையில் அடைப்பு
அல்லு அர்ஜுன் ஏற்கனவே Chanchalguda ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கினாலும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
ஜாமீன் உத்தரவு வரவில்லை என சொல்லி சிறை அதிகாரிகள் அல்லு அர்ஜுனை ரிலீஸ் செய்யாமல் இருக்கின்றனர்.
இன்று இரவு அவர் சிறையில் இருப்பார் என்றும் நாளை காலை தான் ரிலீஸ் செய்யப்படுவார் என சிறை அதிகாரி தற்போது தெரிவித்து இருக்கிறார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
#WATCH | Hyderabad, Telangana: On the release of actor Allu Arjun, Srinivas Rao, Additional DCP Task Force, says, “He (Allu Arjun) will be released tomorrow morning… I don’t know the reasons… He will be released tomorrow morning…” pic.twitter.com/9Rf1WclV1o
— ANI (@ANI) December 13, 2024