ஆல்யா-சஞ்சீவ்
சீரியல் நடிகைகள் தான் எங்கள் கண்கள் என இன்றைய கால இளைஞர்கள் புலம்பும் அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கு மவுசு கூடிவிட்டது.
படங்களில் நடிப்பவர்களே இப்போதெல்லாம் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் என்று எப்போது தொடங்குகிறது… வெளிவந்த தகவல்
அப்படி சீரியல்கள் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி.
புதிய கார்
இவர்கள் சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்ட கட்டிவந்த வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆல்யா மானசா கேரளாவில் உள்ள ஆலப்புழாயில் போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியிருந்தார், அதன் விலை ரூ. 2 கோடி என கூறப்பட்டது.
இந்த நிலையில் சீரியல் ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் சேர்ந்து புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளனர். கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர்கள் பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on Instagram