அமரன் படம்
கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் ஒரே ஒரு படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் பேசி கொண்டாடி வருகிறார்கள்.
அது என்ன படம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான், சிவகார்த்திகேயனின் அமரன். இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை செய்த லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்
படத்தின் மேக்கிங், திரைக்கதை, ஜிவி பிரகாஷின் இசை என அத்தனை விஷயங்களும் படத்தில் பக்காவாக இருந்ததால் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் திரைப்பயணம் அமரனுக்கு முன் அமரனுக்கு பின் என பிரிக்கப்படும் என்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
சிவகார்த்திகேயனின் அமரன் படம் உலகம் முழுவதும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து வருகிறது. தற்போது அமரன் படம் முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடித்துள்ளது.
அதாவது தெலுங்கில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரூ. 45 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி ரூ. 44 கோடி வரை வசூல் செய்திருந்த விஜய்யின் லியோவை முந்தியுள்ளது.