அமரன்
கடந்த ஆண்டு வெளியான படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான படமாக அமைந்தது அமரன்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்திருந்தார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரூ 335 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய இப்படம் 100 நாட்களை எட்டிவிட்டது.
வெற்றி விழா
ரசிகர்கள் கொண்டாடிய இந்த படம் 100 நாட்களை எட்டிய நிலையில் படக்குழுவினர் கொண்டாட உள்ளனர். அதாவது நாளை (பிப்ரவரி 14) வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாம்.