முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சத்தியின் உறுப்பினர் கபில நாகந்தல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான
முதலாம் கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே
அத்தபத்து தலைமையில் இன்று (26) அம்பகமுவ பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது 21 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் திறந்த வாக்கெடுப்பினூடாக
தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் உப தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம்
தெரிவு செய்யப்பட்டது.

பகிரங்க வாக்கெடுப்பு

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தலைவர் தெரிவு இடம்பெற்றதில் 11 வாக்குகளை
பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாகந்தலாகே தொன் கபில நாகந்தல
தலாவராக தெரிவு செய்யப்பட்டார்.

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம் | Ambagamuwa Pradeshiya Sabha In Hands Of Sjb

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06, ஐக்கிய தேசிய கட்சி 01, ஈரேஸ் ஜனநாயக
முன்னணி 01, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 01, சர்வஜன அதிகாரம் 01, சுயேற்சைக்குழு
01 என 11 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சார்பில் அமரசிங்க வசந்த பிரியதர்சன போட்டியிட்ட நிலையில் தேசிய
மக்கள் சக்தியின் உறுப்பினர் 08, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 02 வாக்குகள் என
10 வாக்குகளை பெற்றார்.

உப தவிசாளர் தெரிவு

உப தவிசாளர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக ஆதரவு கிடைத்த நிலையில்
இரகசிய வாக்கெடுப்பில் சுயேட்சைக்குழு உறுப்பினர் விதான கமகே ஹெலப்பிரிய
நந்தராஜ் தேசிய மக்கள் சார்பில் உடகெதரலாகே முதியான்சலாகே ஹரிந்த ஆசிரி உடகே
ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம் | Ambagamuwa Pradeshiya Sabha In Hands Of Sjb

இதன் போது தேசிய மக்கள் சக்தின் உறுப்பினர் 12 வாக்குகளை பெற்று உப தலைவராக
தெரிவானர்.

சுயேட்சைக்குழு உறுப்பினர் நர்ந்தராஜ் 07 வாக்குகளை பெற்றதுடன் இரண்டு
வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக கணிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.