அமெரிக்காவில் (US) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிற்கு (NASA) எதிராக புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி , விண்வெளியில் இருந்து அவர்களது வீட்டின் மீது 700 கிராம் எடையுள்ள குப்பைகள் விழுந்துள்ளது.
சட்ட நிறுவனம்
இதன் படி, குறித்த குடும்பம் நாசாவிற்கு எதிராக 80,000 டொலர்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
நாசாவிற்கு எதிரான இந்த வழக்கில் சட்ட நிறுவனமொன்றும் தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாசாவின் இழப்பீடு
சட்ட நிறுவனத்தின் கூற்று படி, குப்பைத் துண்டு விழுந்தபோது ஓட்டேரோவின் குழந்தை வீட்டில் இருந்ததாகவும், இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கலாம் என்பதால், இதற்கு நாசா ஈடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூரை மீது விழுந்த குப்பை, 2021-ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கழிவுகளாக வெளியிடப்பட்ட பயன்படுத்தப்பட்ட மின்கலன்களின் சரக்குத் தட்டுகளின் ஒரு பகுதி என்று நாசா தெரிவித்துள்ளது.