வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மின்னஞ்சல் எச்சரிக்கை வந்ததை அடுத்து, அமெரிக்காவிலிருந்து(us) இந்தியாவுக்குச்(india) சென்ற பயணிகள் விமானம் அவசர அவசரமாக ரோமுக்கு(rome) திருப்பி விடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு 199 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல்
கிழக்கு மத்திய ஆசியாவில் உள்ள காஸ்பியன் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. பின்னர் அதிகாரிகள் இரண்டு இத்தாலிய விமானப்படை போர் விமானங்களின் பாதுகாப்புடன் குறித்த விமானத்தை ரோமில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரோமில் தரையிறக்கம்
ரோமில் உள்ள லியோனார்டோ டா வின்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது மற்றும் முழு தேடல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது என்று அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
3 மணி நேரத்திற்கும் மேலாக, அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு அது இந்தியாவுக்குத் திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
https://www.youtube.com/embed/DFLiTatmDX8