முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைதி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம்: தீவிரமாகும் பிரச்சினை

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பத்து நாட்களுக்குப் பின், ஜனாதிபதி
மன்னிப்பை பெற்றதாக கூறப்படும் தண்டனைக் கைதி குறித்து, ஜனாதிபதி அலுவலகமும்
சிறைச்சாலைத் திணைக்களமும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில், அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது,
கேள்வி எழுப்பப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
அஜித பி பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளியான அறிக்கைகள்

4 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்
சாட்டப்பட்ட, நிதி நிறுவனம் ஒன்றின் முன்னாள் மேலாளர் டபிள்யூ.எம். அதுல
திலகரத்னவின் விடுதலையை நியாயப்படுத்தி, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளது.

department of prisons

இருப்பினும், வெசாக் பூரணை தினத்தில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளின்
பட்டியலில், குறித்த கைதியின் பெயர் சேர்க்கப்படவில்லை என ஜனாதிபதியின் ஊடக
அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, குற்றப்புலனாய்வுத்துறையிடம் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மன்னிப்புப் பட்டியல்

இந்தநிலையில், முரண்பட்ட இந்த இரண்டு அறிக்கைகளும், தீவிரமான பிரச்சினையாக
மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அஜித் பி பெரோரா, இதன் மூலம், எந்தவொரு
குற்றவாளியும் தனது பெயரை மன்னிப்புப் பட்டியலில் மோசடியாகச் சேர்ப்பதன் மூலம்
தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

srilanka prisoners

சிறைச்சாலைத் திணைக்களம், மன்னிப்புக்கு தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை நீதி
அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தாலும், நீதி அமைச்சகமும் ஜனாதிபதி அலுவலகமும்
மன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியலைப் பரிசீலித்திருக்க வேண்டும்
என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.