Courtesy: Sivaa Mayuri
ராஜபக்சவின் பாரம்பரியம் இந்தியாவை ‘குடும்பமாக’ ஏற்றுக்கொள்வதால், ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நுழைவது வரவேற்கத்தக்கது என்று இந்தியாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்த உறுப்பினரும், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான சுப்பிரமணியன் சுவாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பேரணி
2024 ஓகஸ்ட் 21 ஆம் திகதி நாமல் ராஜபக்ச, தனது முதல் ஜனாதிபதி பேரணியை ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வடமாகாண அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சுவாமியின் கருத்து வெளியாகியுள்ளது.
ஏனைய அண்டை நாடுகளில் உள்ள தலைவர்களைப் போல் அல்லாமல் இந்தியாவில் நாமலுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக ராஜபக்சர்கள் வரவேற்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.