தேசிய மக்கள் அரசாங்கத்திற்கு தெளிவான வெளிநாட்டுக் கொள்கையொன்று இல்லை என நவ ஜனதா பெரமுண கட்சியின் தலைவர் சுகீஷ்வர பண்டார (Sugeeshwara Bandara) விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் (14) மொரட்டுவை பிரதேசத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி இந்தியாவுக்கு (India) சென்றால் ஒன்றைப் பேசுகின்றார். சீனாவுக்கு (China) சென்றால் வேறொன்றைப் பேசுகின்றார். அமெரிக்க பிரதிநிதிகள் முன்னிலையில் இன்னொன்றைப் பேசுகின்றார்.
வெளிநாட்டுக் கொள்கை
அந்த வகையில் இவர்களுக்கு எதுவிதமான தெளிவான வெளிநாட்டுக் கொள்கையும் இல்லை.
அத்துடன் முன்னைய அரசாங்கங்களின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையும் இவர்களிடம் இல்லை.
அரசாங்கத்தின் வாகன இறக்குமதி வாக்குறுதியும் வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே கடந்து போகப் போகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை குளறுபடி காரணமாக எந்தவொரு அமைச்சரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜே.வி.பி. கட்சியின் தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தின் அடிமைகளாகவே மாறிப் போயுள்ளனர் என்றும் சுகீஷ்வர பண்டார கடுமையாக விமர்சித்துள்ளார்.