இத்தாலியில் நடைபெற்ற ‘ஜி7’ மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi) புனித போப் பிரான்சிஸை (pope francis) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது போப்பை கட்டித்தழுவ பிரதமர் மோடி மறக்கவில்லை.
போப்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுக்க பிரதமர் மோடி மறக்கவில்லை.
இந்தியா வருமாறு அழைப்பு
நோயுற்ற போதிலும் போப் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக வத்திக்கான் கூறுகிறது.
ஜி-7 உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் புகலியாவில் ஜூன் 13-ஆம் திகதி முதல் ஜூன் 15-ஆம் திகதி வரை நடைபெற்றது.
பிரதமராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.