பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஜூனியர் கல்லூரியில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க அதிகாரி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(05.05.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அவர் நேற்று (05) மாலை 5.00 மணியளவில் தேர்தல் பணிக்காக வந்திருந்தார் என்றும், மேலும் அந்த அதிகாரி கன்னொருவ தாவர மரபணு வளமையத்தில் ஒரு மேம்பாட்டு அதிகாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பொலிஸார்
உயிரிழந்தவர் கலகெதர, மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

