பிரியங்கா தேஷ்பாண்டே
பிரியங்கா தேஷ்பாண்டே, சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப்பற்றிய எந்த ஒரு அறிமுகமும் சொல்ல வேண்டியது இல்லை.
எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் செம கலகலப்பாக கொண்டு செல்வார். விருது விழாக்களை கூட செம கூலாக நடத்துவார்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் 6 வருடங்களில் அதாவது கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.


7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புதிய திருமணம்
விவாகரத்திற்கு பிறகு தனது அம்மாவுடன் வசித்து வந்த பிரியங்கா எந்த ஒரு சத்தமும் இல்லாமல் டிஜே வசி என்பவரை நேற்று (ஏப்ரல் 16) திருமணம் செய்துகொண்டார்.
அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிரியங்காவிற்கும் அவரது கணவர் வசிக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளதாம்.
வசிக்கு 42 வயதாம், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு 32 வயது.


