முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரிட்டன் தூதுவருடன் நாளை சுமந்திரன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளார்.

குறித்த சந்திப்பானது நாளை (18) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட
நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன.

அரசியல் நிலவரம்

அத்தோடு, நாட்டின் சமகால அரசியல் நிலவரம், அரசின் நடவடிக்கைகள், தமிழ்
மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

பிரிட்டன் தூதுவருடன் நாளை சுமந்திரன் பேச்சுவார்த்தை | Andrew Patrick Meet For M A Sumanthiran

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம்
மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம்
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கின்றது.

அடுத்த கட்ட நகர்வுகள்

இந்தநிலையில், அந்தத் தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம்
முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும்
செயன்முறையின் தற்போதைய நிலவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர்
மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி
உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறியவுள்ளார்.

பிரிட்டன் தூதுவருடன் நாளை சுமந்திரன் பேச்சுவார்த்தை | Andrew Patrick Meet For M A Sumanthiran

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள
நிலையில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள்
குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்