தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள், தலைவரின் வழிநின்று களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, தலைவரின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்படவுள்ள தமிழீழ மாவீரர் பணிமனையின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.
இதேவேளை, குறித்த அறிவிப்பானது, தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும், அறிக்கை வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.