Courtesy: Sivaa Mayuri
மியன்மாரில் 9Myanஉள்ள சைபர் கிரைம் என்ற இணையக்குற்ற முகாம்களில் தற்போது பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இலங்கையர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ( Tharaka Balasuriya ) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த முக்கியமான விடயம் தொடர்பில் மியன்மாரில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாடு திரும்பிய அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள்
குறித்த சைபர் முகாம்களில் தற்போது 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுமார் 53,000 சீன பிரஜைகள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100,000 இளைஞர்கள் இதேபோன்ற நிலைமைகளில் பலவந்தமாக அந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.