முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் உறுப்பினர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை குழுவின் தலைவர் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி

நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்காரவால், பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை கிடைத்தவுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான வரைவு சட்டமூலம் அடுத்த மாதத்திற்குள் தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்தில் 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டம் என திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்! | Anti Terrorism Bill In Two Weeks

இதன்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டமூலம் உயர்  நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டதாகவும் அரசாங்கம் கூறியது.

சட்டமூலத்தில்  மேலும் திருத்தங்களை அடையாளம் கண்டு, அந்தத் திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்தது.

பின்னர், சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை மேலும் ஆய்வு செய்து, அந்த வரைவு சட்டமூலத்தை மேலும் மேம்படுத்த பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி சட்டத்தரனி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.