ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, தன்னை மச்சான் என அழைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு அநுரவை பிடிக்கும்
ஜனாதிபதி அநுர என்னிடம் சாதாரணமாகப் பேசுகிறார், என்னை ‘மச்சான்’ என்று அழைத்து கைகுலுக்குகிறார். வரி முறை மாறாது என்றார். நேர்மையாகச் சொன்னால், எனக்கு அநுரவை பிடிக்கும் என்றார்.

அத்துடன் ஜனாதிபதியுடன் தான் மிகவும் நல்ல நட்பைப் பேணுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
காணொளி – https://www.facebook.com/share/v/17mZ8QY2Wp/

