ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள க்ளீன் சிறிலங்கா என்னும் செயல்திட்டமானது ஒரு தனிப்பட்ட இனத்தை அடிப்படையாக கொண்டது என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறையின் விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
க்ளீன் சிறிலங்கா என்ற திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்து அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இத்திட்டத்தினை நடைமுறைபடுத்துவதற்கு நிறுவப்பட்டுள்ள குழுவில் ஜனாதிபதி செயலாளர் உட்பட பலர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இருப்பினும், குறித்த திட்டமானது, சிறுபான்மையினத்தவர்களை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளமை வருத்தமளிப்பதாக விரிவுரையாளர் எம். கணேசமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இந்த செயல்திட்டத்தில் சிறுபான்மை இனத்தை சார்ந்த எந்தவொரு அதிகாரியும் உள்வாங்கப்படவில்லை. இது தனிப்பட்ட ஒரு இனத்தை அடிப்படையாக கொண்ட திட்டமாகவே இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,