சஜித் பிரேமதாசவுடனான(Sajith Premadasa) விவாதத்திற்காக மே 20 ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர் : பலருக்கும் ஆபத்து
ஊழல் ஆட்சியாளர்கள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த மே தின பேரணியே ஊழல் ஆட்சியாளர்களின் கீழ் தேசிய மக்கள் சக்தி நடத்தும் இறுதி மே தின பேரணியாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்திற்கு அழைத்தனர். அதற்கு 4 நாட்கள் கொடுத்தோம். 4 நாட்களும் அவர்களுக்கு வேலையாம்
எனவே மே 20க்கு முன்னர் விவாத்திற்கான நாளை ஒதுக்குமாறு கோருகிறோம்.
இந்த காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றும் கூறியுள்ளார்.
கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
பொது வேட்பாளர் விடயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள் : மனோ கணேசன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |