எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள பாரிய தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தேங்காய் தொடர்பான பொருட்களை அவசரமாக இறக்குமதி செய்வதற்கான கூட்டு அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் சமர்ப்பிக்கவுள்ளனர்.
அத்துடன், தற்போது கடும் தட்டுப்பாடு நிலவும் தேங்காய்களுக்கு மாற்றாக, தேங்காய் இறக்குமதிக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகள் குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வழங்கிய உரம்
இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு உதவுவதற்காக ரஷ்யாவிடமிருந்து 55,000 டொன் உரங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க கூறியுள்ளார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட உரத்தில் தேயிலை உற்பத்திக்கும் பாதி தேங்காய் உற்பத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

