சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்காக மே 20 ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்குமாறு அனுரகுமார திஸாநாயக்க ,ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற மே தின பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மே தின பேரணியே ஊழல் ஆட்சியாளர்களின் கீழ் தேசிய மக்கள் சக்தி நடத்தும் இறுதி மே தின பேரணி என அவர் சுட்டிக்காட்டினார்.
ரணிலுக்கு ஆதரவாக இந்திய மக்கள்: விமர்சிக்கும் அனுர
விவாதத்திற்கான நாள்
மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க, “ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்திற்கு அழைத்தனர். அதற்கு 4 நாட்கள் கொடுத்தோம். 4 நாட்களும் அவர்களுக்கு வேலையாம் இரவிலும் வேலை செய்வார்கள் போல.
எனவே மே 20க்கு முன்னர் விவாதத்திற்கான நாளை ஒதுக்குமாறு கோருகிறோம். இந்த காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் விவாதத்திற்கு நாங்கள் தயார்” என்றார்.
தேர்தலை இலக்காக கொண்டு ஏமாற்றப்படும் இலங்கையர்கள்: கருத்து வெளியிட்டுள்ள அரசியல்வாதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |