முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய(gotabaya) செய்ததை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே(mahindananda aluthgamage) தெரிவித்தார்.
கோட்டாபய ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தார், ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை குறைத்தார், பாலுக்கு பதிலாக தேநீர், வழங்கினார் ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார் என அளுத்கமகே தெரிவித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கம் அமைக்கப்பட்ட போது மக்கள் இருந்ததாகவும்,ஆனால் அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்த அளுத்கமகே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதே நிலையே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சி
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவேன் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
ரணில் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை
விக்ரமசிங்க புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அல்லது தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.