முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய பாதுகாப்புத் துறையில் மாற்றங்களை செய்யும் ஜனாதிபதி அநுர

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தூரநோக்கம் மற்றும் அரசியல் கலந்தவர்களின் பதவிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகின்றார்.

அதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவினால் (Gotabaya Rajapaksa) பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்பட்ட, ஜெனரல் சவேந்திர சில்வா வகித்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை நீக்கியதாகும்.

2009இல் முடிவடைந்த பிரிவினைவாதப் போரின் போது இந்தப் பதவி பயனுள்ளதாக இருந்தபோதிலும், அது காலாவதியானது. முன்னதாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இருந்து தமது பதவியின் காலத்தை நீடித்துக்கொள்ள அவர் எடுத்த முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே கடந்த செவ்வாய்க்கிழமை அவர் ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து இராணுவத்தளபதியாக இருந்த கோட்டாபயவுக்கு விசுவாசமான விக்கும் லியனகேயும் (Vikum Liyanage) சேவை நீடிப்பை கோரியபோதும், அதனையும் அநுரகுமார வழங்கவில்லை. இந்தநிலையில், அவரும் பதவி விலகினார்.

அதற்கு பதிலாக இராணுவ தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ (Lasantha Rodrigo) நியமிக்கப்பட்டார். அதேநேரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சனா பமுனுகோடா நியமிக்கப்பட்டார்.

இந்த வாரம் இராணுவத் தலைமையகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மேஜர் ஜெனரல் சில்வெஸ்டர் பெரேரா இராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன துணைத் தளபதியாகவும், பிரிகேடியர் நலக மல்சிங்க, செயல்பாட்டு இயக்குநராகவும், மேஜர் ஜெனரல் தினேஸ் உடுகம, பொதுப் பணியாளர்கள் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், இராணுவ புலனாய்வு இயக்குநரகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதன் இயக்குநர் பிரிகேடியர் சந்திக்க மகாதந்திலக, திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு இயக்குநராக பிரிகேடியர் தீப்த அரியசேன பொறுப்பேற்றுள்ளார்.     

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க…..

https://www.youtube.com/embed/LSTdbLgH3SM

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.