முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரவு செலவுத்திட்டம் – 2026 : அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Disanayake) தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் (Ministry of Finance) உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, மக்கள் நலனுக்கான முக்கிய சேவைகள், மற்றும் தேவைகளை அடையாளம் காணும் பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வரவு செலவுத்திட்டம் - 2026 : அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல் | Anura Meet Dcc Chairpersons For 2026 Budget Ideas

இந்த நிலையில் இதனை அடிப்படையாக கொண்டு, 2026 வரவு செலவுத் திட்டம் தயார் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, அரச நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஈ. ஏ. ரத்னசீல, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நாயகம் எம்.அனோமா நந்தனி மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.