ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த அனுரகுமார திசாநாயக்க, தற்போது அது குறித்து மௌனம் சாதிக்கத் தொடங்கியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளித்திருந்தனர்.
அண்மிக்கும் ஒருவருடகாலம்
ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து தற்போதைக்கு ஒருவருட காலத்தை அண்மித்து விட்டது.

அதிகாரங்களை அதிகரிக்க முயற்சி
எனினும் ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்தோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பது தொடர்பில் தற்போது ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களோ வாய் திறப்பதில்லை.

அதற்குப் பதிலாக ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

