மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் சுதந்திரமாக தமது கருத்துக்களை தெரிவிக்கமுடியாத
வகையிலான அச்சுறுத்தல் பிள்ளையான் போன்றவர்களினால் விடுக்கப்படுவதாகவும் தமது
ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் எனவும் தேசிய மக்கள்
சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பில் மாற்றத்திற்காக ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என
பிள்ளையான் அறிவித்துள்ளார். மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான
தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
தாங்கள் விரும்பிய ஒரு அரசியலை செய்வதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுள்ள போதிலும் மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு அச்சப்படும் நிலைமையே காணப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களும்
களையப்படும். நீதிக்கும் சட்டத்திற்கும் முரணாக அரசியல் செய்வதை எவருக்காகவும் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மேலதிக தகவல் – குமார்