தேசிய மக்கள் சக்தியிலுள்ள(NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கட்சியினுடைய மத்திய நிதிக்கு செல்கின்றது. பின்னர் அங்கிருந்து எல்லாவற்றுக்கும் பிரித்து கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
இது ஒரு பாரதூரமான விடயம் என்று அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இது எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இடம்பெறகூடிய விடயம் அல்ல. இவ்வாறு கட்சியினூடாக பணம் வரும் போது அந்த பணம் குறைவாக அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் வேறு வழியில் பணம் ஈட்டக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.
இதனால் ஊழல் அதிகரிக்குமே தவிர குறையாது” என சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு…