2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, இலங்கை இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இலங்கை கடற்படையினருக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகமாக உள்ளது.
இலங்கை ஒரு தீவு என்பதால், நாட்டிற்கு ஏதேனும் ஒரு ஆபத்து வந்தால் அது கடல் வழியாக வரக்கூடும் என்ற அடிப்படியில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும், இலங்கையில் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இலங்கையில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கும் படி கடந்த காலங்களில் முன்மொழியப்பட்ட போதிலும் அது குறித்த நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இராணுவத்தினரின் எண்ணிக்கையை தொடர்ந்தும் அதிகளவில் பேணுவதற்கு காரணம், அரசாங்கத்திற்கு எதிராக எவரும் கேள்வி கேட்கலாம் என்ற அச்சமே ஆகும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,